மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம் + "||" + Alternative Skills Migration Struggle

மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்

மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மாநிலம் தழுவிய காலவரையற்ற குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். 

அதன்படி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடந்தது. இதில் ரங்கசாமி, மாரிமுத்து, கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அருள் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.