ஆற்காட்டில் கலெக்டர் ஆய்வு


ஆற்காட்டில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Feb 2021 7:27 PM IST (Updated: 23 Feb 2021 7:27 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

ஆற்காடு

ஆற்காட்டில் கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான பள்ளிகள் மற்றும் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கான வைப்பறை ஆகியவற்றை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ் டன் புஷ்பராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 

அதன்படி இன்று ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான பள்ளிகள் மற்றும் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கான வைப்பறை ஆகியவற்றை ஆற்காடு பகுதியில் உள்ள கட்டிடங்கள், பாதுகாப்பு வசதிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ் டன் புஷ்பராஜ் நேரில் ஆய்வு செய்தார். 

அப்போது உதவி கலெக்டர் இளம்பகவத், தாசில்தார் காமாட்சி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story