மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி + "||" + The student fell into the well and died

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி
கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பரிதாபாக இறந்தான்.
கலவை 

கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பரிதாபாக இறந்தான்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் தயாநிதி (வயது 14), மாம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று மாம்பக்கத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதனை காண சில மாணவர்கள் மதிய வகுப்பை புறக்கணித்துவிட்டு திருவிழாக்கு சென்றனர். 

பின்னர் திரவுபதி அம்மன் கோவில் அருகே தரை கிணற்றில் மாணவர்கள் குளிக்கும்போது தயாநிதி கிணற்றில் தவறி விழுந்து விட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக  மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, வரும் வழியிலேயே தயாநிதி இறந்து விட்டதாக கூறினர். 

இந்த சம்பவம் குறித்து வாழப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.