பெரணமல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.


பெரணமல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
x
தினத்தந்தி 23 Feb 2021 8:03 PM IST (Updated: 23 Feb 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

பெரணமல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் அருகே உள்ள முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 53). இவரது மகள் உமாராணி (24). இவர்கள் ஒரு வீட்டின் மாடியில் குடியிருந்து வந்தனர்.

கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு இவர்கள் சுற்றுலா சென்றனர். பின்னர் ஊருக்கு திரும்பியபோது வீட்டின் முன் பகுதி கதவு பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன். நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ெராக்கம், லேப்டாப், கியாஸ் சிலிண்டர் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

பூட்டப்பட்டிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் பச்சையம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை ேதடி வருகிறார்.

Next Story