அரக்கோணத்தில் கிராமநிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
அரக்கோணத்தில் கிராமநிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
ராணிபேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாக்களில் பணிபுரியும் கிராமநிர்வாக அலுவலர்களை அரக்கோணம் உதவி கலெக்டர் பேபி இந்திரா பணியிட மாற்றம் செய்யதுள்ளார். கட்டாய பணியிட மாற்றம் செய்ததாக கூறி அரக்கோணம் உதவி கலெக்டரை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் பணிசெய்ய உத்தரவு வழங்க கோரியும் கிராமநிர்வாக அலுவலர்கள் அரக்கோணம் உதரி கலெக்டர் அலுவலகத்தில் கிராமநிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமநிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவகுமார், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் திருச்செந்தூர் வேலன் மற்றும் அரக்கோணம் கோட்ட செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமநிர்வாக அலுவலர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story