ஏரல் அருகே பெருங்குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை


ஏரல் அருகே பெருங்குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை
x
தினத்தந்தி 23 Feb 2021 3:20 PM GMT (Updated: 23 Feb 2021 3:20 PM GMT)

பெருங்குளம் குளத்திற்கு வந்த வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன

ஏரல்:
ஏரல் அருகே பெருங்குளம் குளத்துக்கு மருதூர் கீழக்கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இதனால் 826 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் நிரம்பி கடல் போன்று காட்சி அளிக்கிறது. இதனால் பெருங்குளம் குளத்துக்கு வெளிநாட்டு பறவைகளும் வரத்தொடங்கி உள்ளன. குளக்கரைகளில் உள்ள மரங்களில் தங்கியிருந்து குளத்தில் மீன்பிடிக்கும் பறவைகளை பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.
இதுகுறித்து முத்துநகர் இயற்கை பாதுகாப்பு கழக செயலாளர் பண்ணைவிளை பங்களா தாமஸ் மதிவாணன் கூறுகையில், ‘பெருங்குளம் குளம் நிரம்பியதால், இங்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. வடதுருவத்தில் உள்ள நார்வே, சுவீடன் போன்ற நாடுகளில் வசிக்கும் நாமத்தலை வாத்து என்று அழைக்கப்படும் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. எனவே குளத்தின் கரைகளில் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதனால் பறவைகள் மரக்கிளைகளில் கூடுகட்டி குஞ்சி பொரிக்கும். பறவைகளை பாதுகாப்பதுடன் குளத்தில் தண்ணீரையும் மாசடையாமல் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

Next Story