நாகை தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்


நாகை தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 3:38 PM GMT (Updated: 23 Feb 2021 3:38 PM GMT)

தனியார் துறை வேலை வாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி நாகை தாசில்தார் அலுவலத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
தனியார் துறை வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாகை தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியேறும் போராட்டம்
 அனைத்து தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். 
இதில் மாற்றுத்திறானிகள் பலர் கலந்து கொண்டு தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
 அப்போது அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் தாசிலதார் ரமாதேவி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் தாசில்தார் அலுவலகம் எதிரே மரத்தடி  தரையில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story