வால்பாறையை உருவாக்கிய கார்வர்மார்ஷ் சிலை பராமரிப்பு


வால்பாறையை உருவாக்கிய கார்வர்மார்ஷ் சிலை பராமரிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 3:44 PM GMT (Updated: 23 Feb 2021 3:45 PM GMT)

வால்பாறையை உருவாக்கிய கார்வர்மார்ஷ் சிலை பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

வால்பாறை,

பச்சை பசேலென காட்சியளிக்கும் மலைகள், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா மையங்கள் என்று வால்பாறையில் பார்த்து மகிழ பல இடங்கள் உள்ளன. இந்த வால்பாறையை ஆங்கிலேயர் கள்தான் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள். 

வால்பாறை பகுதியை உருவாக்கிய கார்வர்மார்ஷ் என்ற ஆங்கிலேய தோட்ட அதிகாரி, பூனாச்சி என்ற ஆதிவாசி யுடன் சேர்ந்து வால்பாறைக்கு சென்று அங்கு காபி  ேதாட்டங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். 

 இந்த பணி முடிந்த பின்னர்தான் வால்பாறை என்ற மலைப்பிரதேசம் வெளியுலகுக்கு வந்தது. அவர் கடந்த 1934-ம் ஆண்டு இறந்து விட்டார். அவரை நினைவு கூறும் வகையில், கவர்க்கல் எஸ்டேட் பகுதியில்  கார்வர் மார்சின் சிலை அமைக்கப்பட்டது. அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. 

பராமரிப்பு பணி 

சுற்றுலா பயணிகள் மற்றும் பலர் சிலை உள்பட பல்வேறு பகுதிகளை ேசதப்படுத்தினார்கள்.  எனவே அதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் நடவடிக்கை எடுத்ததால், இந்த சிலை வளாக பகுதியை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 

சிலை வளாகத்தில் யாரும் உள்ளே செல்வதை தடுக்க கம்பிகள் அமைக்கும் பணியும், தேயிலை தோட்டங்கள், இயற்கை பகுதியை பார்த்து மகிழ பார்வையாளர் மாடம் அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது. 

பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கிடந்த இந்த சிலை வளாகத்தை பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். 


Next Story