வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாசிமகத்திருவிழா
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்து, மூடிக்கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.
பல்வேறு சிறப்பு பெற்ற ேவதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் யாழ்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, அறங்காவல் குழு தலைவர் கிரிதரன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் நமச்சிவாயம், குருகுலம் நிர்வாகிகள் வேதரத்தினம், கேடிலியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்து தேரடியை அடைந்தது.
இதற்கான பாதுகாப்பு பணியில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் தலைமையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story