மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிப்பு + "||" + Gold chain flush to the walking grandmother

நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிப்பு

நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிப்பு
தேனி போலீஸ் நிலையம் அருகில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலியை பறித்து சென்றனர்.
தேனி: 

தேனி ரத்தினம் நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 63). அவருடைய மனைவி சந்திரா (61). 

சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும், தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றனர். 

பின்னர் அவர்கள் ரத்தினம் நகர் செல்வதற்காக என்.ஆர்.டி. சாலையில் இருந்து பெரியகுளம் சாலை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தனர். 

தேனி போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அவர்கள் நடந்து வந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். 

அதில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர், சந்திராவின் கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்கசங்கிலியை பறித்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் காயம் அடைந்தார். 

வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீஸ் நிலையம் அருகிலேயே நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.