குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்து அலையும் தாய் குரங்கு
குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்துக்கொண்டு தாய் குரங்கு அலைகிறது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக குரங்குகள் அதிகளவில் உள்ளன.
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையில் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன. இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
இதனை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லை. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி நீலகிரியில் உள்ள பொதுமக்களும் தொடர்ந்து குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி பகுதியில் குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டு சுற்றித்திரிந்து வருகிறது.
கூட்டத்தோடு சுற்றி திரியும் அந்த தாய் குரங்கின் பாசப்போராட்டம், பார்ப்போரை கவலை அடைய வைத்துள்ளது.
இந்த சிலர் தங்களது செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story