மத்திய மந்திரிக்கு கொரோனா பரிசோதனை
மத்திய மந்திரிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுவைக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வருகிறார். அவர் அரசு விழா மற்றும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். புதுவை வரும் மோடியுடன் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பாரதீய ஜனதா பொறுப்பாளர்களான மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால், நிர்மல்குமார் சுரானா, சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story