எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர்மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
அகில இந்திய எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யாமல் பொதுத்துறையில் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் கிளை செயலாளர் சஞ்சய்ராஜா தலைமை தாங்கினார். கோவை கோட்ட கிளை சங்கத்தின் சார்பில் துளசிதரன், திருப்பூர் கிளை தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் நாகராஜ் மற்றும் அவினாசி, காங்கேயம் கிளை சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி.யை பாதுகாப்போம் என்று கோஷம் எழுப்பி அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
Related Tags :
Next Story