உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி (த) மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தற்கொலை முயற்சி


உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி (த) மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 23 Feb 2021 11:46 PM IST (Updated: 23 Feb 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தற்கொலை முயற்சி

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மஞ்சநாய்க்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 35). இவர் பெரும்பாலை மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பணி நிரந்தரம் கிடைத்து விடும் என காத்திருந்தார். இந்த நிலையில், கேங்மேன் பணியிடங்களுக்கு மின்வாரியம் வேறு நபர்களை நியமனம் செய்ய இருப்பதால், மனமுடைந்த சின்னசாமி கருப்பையனஅள்ளியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் போலீசார் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கீழே இறங்கிய சின்னசாமிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
---

Next Story