கரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் 37 இடங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்வு


கரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் 37 இடங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்வு
x
தினத்தந்தி 23 Feb 2021 6:20 PM GMT (Updated: 23 Feb 2021 6:20 PM GMT)

கரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் 37 இடங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கரூர்
242 துணை வாக்குச்சாவடி
கரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான அரவக்குறிச்சியில் 251, கரூரில் 261, கிருஷ்ணராயபுரத்தில் 253, குளித்தலையில் 267 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 1,032 வாக்குச்சாவடி மையங்கள் தற்போது உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதனடிப்படையில், புதிய துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், இடமாற்றம் செய்தல் தொடர்பான பட்டியல் உங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 59 துணை வாக்குச்சாவடி மையங்களும், கரூர் தொகுதியில் 94 துணை வாக்குச்சாவடி மையங்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 44 துணை வாக்குச்சாவடி மையங்களும், குளித்தலை தொகுதியில் 45 துணை வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 242 புதிய துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
37 இடங்கள் தேர்வு
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எந்தெந்த இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில், அரவக்குறிச்சி தொகுதியில் 13 இடங்களும், கரூர் தொகுதியில் 9 இடங்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 8 இடங்களும், குளித்தலை தொகுதியில் 7 இடங்களும் என மொத்தம் 37 இடங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 செலவீனங்கள் தொடர்பான விலைப்பட்டியல் குறித்த விபரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த விபரங்களை முழுமையாக பார்த்து தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அதனை எழுத்துப்பூர்வமாக மாவட்ட கலெக்டரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story