சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 126 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 126  பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 6:20 PM GMT (Updated: 23 Feb 2021 6:20 PM GMT)

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 126 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்
சத்துணவு ஊழியர்கள் சங்கம்
காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சட்டரீதியான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும். பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெண்கள் தலைமையில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சாலை மறியல்
இதற்கு மாவட்ட பொருளாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
பின்னர் தொடர்ந்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 114 பெண்கள் உள்பட 126 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story