இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தோகைமலை
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று தோகைமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இலக்குவன், சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் தோகைமலை ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் தங்கராசு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
9-ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் சட்டசபையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டார்.