மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்ட எதிர்ப்பு


மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்ட எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 11:50 PM IST (Updated: 23 Feb 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்ட எதிர்ப்பு

மேல்மலையனூர், 

அவலூர்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினரும் (அ.தி.மு.க தவிர) எதிர்ப்பு தெரிவித்து செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளி வளாகத்தில்  பள்ளி கட்டிடம் தவிர வேறு எந்த கட்டிடமும் கட்டக்கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story