மாவட்ட செய்திகள்

பனியன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + knit labours struggle

பனியன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பனியன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பனியன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்

 நிறுவனங்களில் வேலை செய்து வருகிற லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பனியன் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையை விரைவாக முடித்து, நியாயமான சம்பள உயர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மாலை குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. பனியன் சங்க பொதுச்செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சேகர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிவசாமி உள்பட பலர் கலந்துகொண்டுபேசினார். இதில் எல்.பி.எப்., எச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களும் கலந்துகொண்டன. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.