சுசீந்திரம் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம் வசூல்


சுசீந்திரம் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 24 Feb 2021 12:09 AM IST (Updated: 24 Feb 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம் வசூல்

சுசீந்திரம்:
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக காணிக்கை செலுத்தும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலை சுற்றிலும் 11 உண்டியல்கள் வைத்துள்ளனர். உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.
குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில், கோவில் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக ரூ.10 லட்சத்து 86 ஆயிரத்து 846-ம், 14.500 கிராம் தங்கமும், 64 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணங்களும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

Next Story