மாவட்ட செய்திகள்

அம்மா மினி கிளினிக் திறப்பு விழா + "||" + Mom Mini Clinic Opening Ceremony

அம்மா மினி கிளினிக் திறப்பு விழா

அம்மா மினி கிளினிக் திறப்பு விழா
சங்கராபுரம் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி முன்னாள் தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், டாக்டர் புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். 
சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் காமராஜ் கலந்து கொண்டு மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசினார். இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் ஜான் ரத்தினம், கோவிந்தன்  ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் அந்தோணி தயாள்ராஜ், மேலவை பிரதிநிதி அருள்தாஸ், நிர்வாகிகள் ஜான்போஸ்கோ, ஜான் கென்னடி, கணேசன், ஏழுமலை, கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண்குமார், சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியப்பன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.