திருப்பூரில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட தர்பூசணி
திருப்பூரில் விற்பனைக்காக தர்பூசணி குவிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் காலையில் பனியும், மதியம் வெயிலும் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே வாகன ஓட்டிகள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் குளிர்பானங்களை வாங்கி பருகி வருகிறார்கள். சர்பத், மோர், இளநீர் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கிடையே மேலும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தர்பூசணி பழங்களும் திருப்பூரில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தர்பூசணி வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு திண்டிவனம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தர்பூசணி பழங்களை விற்பனைக்காக கொண்டு வருகிறோம். கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக தர்பூசணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்தும் குறைவாக உள்ளது. வரத்து குறைவினால் தர்பூசணி பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விற்பனையும் நன்றாக உள்ளது. வருகிற காலங்களில் மேலும் வெயில் அதிகமாக இருக்கும், விற்பனையும் அதிகமாக நடைபெறும் என எதிர்பார்த்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
---
Related Tags :
Next Story