உணவு திருவிழா
உணவு திருவிழா நடைபெற்றது.
லாலாபேட்டை
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையஜெயங்கொண்டம் சமுதாயக் கூடத்தில் குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணராயபுரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் குறல் செல்வி தலைமை தாங்கினார். உணவு திருவிழாவில், வளர் இளம் பெண்கள் ரத்த சோகை வராமல் தடுக்கும் பொருட்டு காய்கறி, பேரீச்சம்பழம் போன்றவை சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கீரை, முட்டை, பால், பழங்கள், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கீரை, பயிறு, பழங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story