கையுந்து பந்து போட்டி


கையுந்து பந்து போட்டி
x
தினத்தந்தி 23 Feb 2021 7:11 PM GMT (Updated: 23 Feb 2021 7:11 PM GMT)

கையுந்து பந்து போட்டி

காளையார் கோவில், பிப்.
காளையார் கோவில் மாஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் காளையார் கோவில் ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம் இணைந்து கையுந்து பந்து போட்டிைய நடத்தியது. முதலாம் ஆண்டு ஆடவர் மற்றும் மகளிருக்கான மின்னொளி கையுந்து பந்து போட்டி காளையார்கோவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆடவர் பிரிவில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியினர், ஏ.கே.ஆர். கல்லூரணி அணியினர் உள்பட 10 அணிகள் பங்கு பெற்றன. இப்போட்டிகளில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதலிடமும், ஏ.கே.ஆர். கல்லூரணி அணியினர் இரண்டாமிடமும், கீரமங்கலம் சிவா ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர் மூன்றாமிடமும் பெற்றனர்.
மகளிர் பிரிவில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியினர், ஆத்தூர் பாரதியார் அணியினர் உள்பட 6 அணிகள் பங்கு பெற்றதில் முதலிடத்தை சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியினரும், இரண்டாமிடத்தை ஆத்தூர் பாரதியார் அணியினரும், மூன்றாமிடத்தை மதுரை சாம்பியன் வாலிபால் அகாடமி அணியினரும் பெற்றனர். வெற்றியடைந்த ஆடவர் மற்றும் மகளிர் அணியினருக்குபரிசுக் கோப்பைகளை சிவகங்கை மாவட்ட அறம் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள், காளையார்கோவில் தொழிலதிபர்கள் சார்லஸ், அஜித், பெமினா நாகராஜன் உள்பட பலர் வழங்கினர். சிவகங்கை கையுந்து பந்து கழக செயலாளர்கள் மனோன்மணி, ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் சேது பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் சூசை ஆரோக்கிய மலர் வரவேற்று பேசினார். முடிவில் ஆசிரியர் கணேசன் நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை மாஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் தெய்வீக சேவியர், பொருளாளர் ஆரோக்கியசாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story