மாவட்ட செய்திகள்

வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை + "||" + Suicide by hanging

வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
ராமநாதபுரம்,பிப்.
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் என்பவரது மகன் சிராஜூதீன் (வயது 26). தென்னந்தோப்பு ஒன்றில் தேங்காய்களை ஏற்றிச்செல்லும் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தாராம். திருமணம் ஆகவில்லை. இவரது தாய், தந்தை இருவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  இந்த நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல வேலைக்கு கிளம்பி சென்றவர் கரிச்சான்குண்டு எதிரே கருவை காட்டுக்குள் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திவாகர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
திருப்பூரில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பாக வைரலாகும் வாட்ஸ்-அப் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.