அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நிறுவனத்தில் பணி வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு பலகட்ட போராட்டங்களை கிராமத்தினர் நடத்தினர்.
தேர்தலுக்காக சோதனை நடத்தப்படும்போது, வணிகர்களிடம் பணம் பறிமுதல் செய்வதில் அதிகாரிகள் அத்துமீறலை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.
வெகு விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும், அதற்கான போராட்டம் தேர்தலுக்குப் பிறகு தீவிரமாகும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.