அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
சென்னை காவல்துறை அரசு ஊழியர்கள் மீது நடத்திய தடியடி தாக்குதலை கண்டித்தும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நேற்று மாலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
9-ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் சட்டசபையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டார்.