மாவட்ட செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முப்பெரும் விழா + "||" + The Great Festival

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முப்பெரும் விழா

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முப்பெரும் விழா
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முப்பெரும் விழா
அரியலூர்
அரியலூரில், நேற்று முன்தினம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா, மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கும் விழா, கொரோனா ஊரடங்கு சமயத்தில் கட்சி சார்பில் 1 லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவி வழங்கிய நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன. விழாவிற்கு அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம்  ராம ஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கழக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. அரியலூர் பஸ் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளை திறந்து வைத்து மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல, வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. 100 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்யும் விதமாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தொடர அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். ஜெயலலிதா பிறந்த நாளான இன்றைய தினம் தங்களது இல்லங்களில் தீபம் ஏற்றி மீண்டும் நம் ஆட்சியை கொண்டு வரஉறுதி மொழி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவில் அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்படும். பின்னர், மார்க்கெட் தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் மாலை 5 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என்று மாவட்ட கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.