தவுட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கார்த்தி, மயில்வாகனன், வில்லாளி, அருள்முருகன் பிரசாந்த் சிவக்குமார் மற்றும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். தொடர்ந்து முககவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தாலும், வாகனத்தில் அமர்ந்து இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெமல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.