மாவட்ட செய்திகள்

விற்பனைக்கு வந்த வெள்ளை வெங்காயம் + "||" + White onion

விற்பனைக்கு வந்த வெள்ளை வெங்காயம்

விற்பனைக்கு வந்த வெள்ளை வெங்காயம்
அறந்தாங்கி செவ்வாய்சந்தையில் 1 கிலோ வெள்ளை வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அறந்தாங்கி, பிப்.24-
இஸ்ரேல் நாட்டில் வெள்ளை வெங்காயம் அதிக அளவில் விளையும். இந்த வெங்காயம் கிடைப்பது அரிது. தற்போது, அறந்தாங்கி சந்தைக்கு இந்த வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. இதைபொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு அறந்தாங்கி சந்தைக்கு வெள்ளை வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வெங்காயத்தில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.  உடல் சூட்டை தணிக்க இந்த வெள்ளை வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. நேற்று அறந்தாங்கி செவ்வாய்சந்தையில் 1 கிலோ வெள்ளை வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர் என்றார்.