கடலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் 30 பேர் கைது
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் 30 பேர் கைது
கடலூர்,
சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அனைவரையும் முழு நேர அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கற்பகம் தலைமை தாங்கினார். செல்லவேல், ரவிக்குமார், கருணாகரன், வெற்றிமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story