சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம் நாளை நடக்கிறது
சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம்
சிதம்பரம்,
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாஅபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாத மகா அபிஷேகம் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணி முதல் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு விபூதி பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதா்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story