மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்


மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 Feb 2021 1:56 AM IST (Updated: 24 Feb 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
பூக்கள் பூத்தன 
வத்திராயிருப்பு அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், அத்தி கோவில், வ.புதுப்பட்டி, நெடுங்குளம், கூமாப்பட்டி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற பேர் மா மரங்களை வளர்த்து வருகின்றனர். 
இன்னும் சில மாதங்களில் இந்த மாங்காய் சீசன் தொடங்க உள்ளது. தற்போது மா மரங்களில் பூக்கள் பூத்து வருகிறது. 
மருந்து தெளிக்கும் பணி 
பூக்கள் காய்ந்து உதிர்ந்து விடாமல் இருக்கவும், காய் மற்றும் மாவடுக்கள் உதிராமல் தடுப்பதற்கும் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மா மரங்களை வைத்து பராமரித்து வருகிறோம். 
அதிக மகசூல் 
தற்போது மா மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கி விட்டன. 
 இந்த பூக்கள் உதிர்ந்து விடாமலும் வெயிலில் கருகி விடாமல் இருப்பதற்காகவும், அதிக மகசூலை விளைச்சலில் காண்பதற்காக முன்கூட்டியே மருந்து தெளிக்கும் பணி நடைபெறும்.  இவ்வாறு மருந்து தெளிப்பதால் மரங்களில் உள்ள பூக்கள் உதிர்ந்து விடாமலும், காய் மற்றும் மா வாடுகள் உதிர்ந்துவிடாமலும் இருக்கும். தற்போது சரியான பருவ நிலையில் விவசாயிகள் மாமரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினார்.



Next Story