மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில்வரதட்சணை வழக்கில் தேடப்பட்டவர் கைதுசிங்கப்பூரில் இருந்து திரும்பிய போது சிக்கினார் + "||" + On his return from Singapore, a man wanted in a dowry case was arrested at Trichy airport

திருச்சி விமான நிலையத்தில்வரதட்சணை வழக்கில் தேடப்பட்டவர் கைதுசிங்கப்பூரில் இருந்து திரும்பிய போது சிக்கினார்

திருச்சி விமான நிலையத்தில்வரதட்சணை வழக்கில் தேடப்பட்டவர் கைதுசிங்கப்பூரில் இருந்து திரும்பிய போது சிக்கினார்
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய போது திருச்சி விமான நிலையத்தில் வரதட்சணை வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
செம்பட்டு, 
தஞ்சை மாவட்டம் அத்திக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 42). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வரதட்சணை வழக்கு நிலுவையில் உள்ளது. அவரை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் சிங்கப்பூர் சென்று டிரைவர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் ஜெயச்சந்திரன் திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அப்போது, அவரை பட்டுக்கோட்டை போலீசார் தேடி வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.