இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம் 28-ந்தேதி நடக்கிறது


இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம் 28-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 24 Feb 2021 2:21 AM IST (Updated: 24 Feb 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம் 28-ந்தேதி நடக்கிறது

சமயபுரம், 
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் ஆதிமாரியம்மன் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இன்று(புதன்கிழமை) யானை வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை) ரிஷப வாகனத்திலும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அன்ன வாகனத்திலும், 27-ந்தேதி குதிரை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி காலை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் அசோக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story