கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண் பரிதாப சாவு


கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண் பரிதாப சாவு
x
தினத்தந்தி 24 Feb 2021 2:37 AM IST (Updated: 24 Feb 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

தளவாய்புரம் அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண் பரிதாபமாக இறந்தார். 
கண்மாய் 
தளவாய்புரம் அருகே உள்ள நத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மனைவி ராஜேஸ்வரி (வயது27). இவர்களுக்கு பவித்ரா (10) என்ற மகளும், அஸ்வந்த் (5) என்ற மகனும் உள்ளனர். இவர் ஜமீன் கொல்லங்கொண்டானில் உள்ள தனது அப்பா சங்கர வேல் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார். 
நேற்று பகல் ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் தனது அண்ணன் வீட்டாருடன் அங்கு உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். 
தவறி விழுந்தார் 
அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரி கால் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கிவிட்டார்.
 உடனே அவரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி  ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். 
இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story