மாவட்ட செய்திகள்

நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் + "||" + Anganwadi workers in Nellai went on strike for the 2nd day.

நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, பிப்.24-
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க செயலாளர் ஞானம்மாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் கீதா, பெருமாள், முருகன், சரவணபெருமாள், சங்க மாவட்ட தலைவர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.