மாவட்ட செய்திகள்

தி.மு.க. சார்பில் பட்டிமன்றம் + "||" + DMK Bar on behalf of

தி.மு.க. சார்பில் பட்டிமன்றம்

தி.மு.க. சார்பில் பட்டிமன்றம்
தி.மு.க. சார்பில் பட்டிமன்றம்
திருப்பரங்குன்றம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வருகிற மார்ச் 1-ந் தேதி வருகிறது. இதனையொட்டி டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பெரிதும் காரணம் அவர் சந்தித்த சோதனைகளா? சாதிக்கின்ற சாதனைகளா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. நடுவராக நாஞ்சில் சம்பத் இருந்தார். மு.க. ஸ்டாலின் தலைவராக பெரிதும் காரணம் சாதிக்கின்ற சாதனையே என்ற அணி தலைவராக டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ.வும், சோதனைகளே என்ற அணியின் தலைவராக நெல்லிகும்பம் புகழேந்தி எம்.எல்.ஏ.வும் இருந்து வாதிட்டனர். சாதனைகளே என்ற அணியில் நாகை நாகராஜன், கோவை சத்யாவும் சோதனைகளே என்ற அணியில் சினிமா பட இயக்குனர் போஸ் வெங்கட், கவிச்செல்வி ஆகியோர் பேசினர். டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. பேசும்போது, தலைவருக்கு சோதனைகள் முடிந்து விட்டது. 2 மாதத்தில் தமிழக முதல்-அமைச்சராக போகிறார் என்றால் அது சாதனைதானே. உழைப்புதான் தலைவரை உயர்த்தி இருக்கிறது. அதுதான் சாதனை என்றார். நெல்லிக்குப்பம் புகழேந்தி எம்.எல்.ஏ. பேசும்போது, சோதனைகளை தாங்கி, தாங்கிதான் மு.க.ஸ்டாலின் தலைவரானார் என்றார்.