மாவட்ட செய்திகள்

திருக்குறுங்குடி அருகே 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன + "||" + 2 mountain snakes were caught near Thirukurungudi

திருக்குறுங்குடி அருகே 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன

திருக்குறுங்குடி அருகே 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன
திருக்குறுங்குடி அருகே 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள ராஜபுதூரை சேர்ந்த விவசாயியான பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஒரு மலைப்பாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் விரைந்து சென்று 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.

இதுபோல ராஜபுதூர்- பணகுடி சாலையில் ஆட்டு மந்தைக்கு அருகில் மற்றொரு மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் அந்த மலைப்பாம்பையும் பிடித்தனர். அந்த பாம்பு 15 அடி நீளம் இருந்தது. பிடிபட்ட 2 மலைப்பாம்புகளையும் வனத்துறையினர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.