குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 229 பேர் கைது


குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 229 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 10:24 PM GMT (Updated: 23 Feb 2021 10:24 PM GMT)

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 229 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 229 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம் 
சேலம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜவேலு வரவேற்று பேசினார்.
மாவட்ட தலைவர் தங்கவேலன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.  ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநிலத்தலைவர் திருவேரங்கன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சங்க மாவட்ட பொருளாளர் அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
229 பேர் கைது
சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஆகியோரை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி இட மாறுதல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது. 
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து சேலம் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 229 பேரை கைது செய்தனர்.

Next Story