சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநில எல்லையில் உள்ள  சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பை  பலப்படுத்த நடவடிக்கை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 23 Feb 2021 10:31 PM GMT (Updated: 23 Feb 2021 10:31 PM GMT)

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விடும். அந்த நேரத்தில் மாநில எல்லைப்பகுதிகளில் மதுபானங்கள் எடுத்துச்செல்வது அதிகரிக்கும்.  இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
பாதுகாப்பை பலப்படுத்துவது...
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, கர்நாடக மாநிலத்தின் சார்பில் சாம்ராஜ் நகர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்கள்.
கூட்டத்தில், ‘ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள ஆசனூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு சோதனைசாவடி, பண்ணாரி சோதனை சாவடி, வனத்துறை சார்பில் கேர்மாளம், மகாராஜபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
தீவிர கண்காணிப்பு
இதுபோல் கர்நாடக மாநிலம் சார்பில் அந்த மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், கூடுதலாக தேவைப்படும் இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பது, தொடர் மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது என்றும் அதிகாரிகள் தீர்மானித்தனர். மேலும் 2 மாநில அதிகாரிகளும் எல்லைப்பகுதிகளில் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஈஸ்வரன் (கணக்குகள்) மற்றும் வனத்துறை அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story