மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 6 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கியது
மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 6 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கியது
மேட்டூர்:
மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பல்வேறு நிர்வாக காரணங்களால் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் மின் தேவை அதிகரித்தது. அதை கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story