மாவட்ட செய்திகள்

சேலம் மாநகராட்சியில்கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு + "||" + Review by Commissioner Ravichandran

சேலம் மாநகராட்சியில்கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு

சேலம் மாநகராட்சியில்கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு
சேலம் மாநகராட்சியில் கழிவுநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
சேலம், பிப்.24-
சேலம் மாநகராட்சியில் கழிவுநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கழிவுநீர் வடிகால்கள்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகளாலும் மற்றும் குப்பைகளாலும், மண் சரிவினாலும் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதை தடுக்க அவற்றை தூர்வாரி மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டிலும், சூரமங்கலம் மண்டலத்தில் ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலும் கழிநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளை தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆணையாளர் ஆய்வு
கொண்டலாம்பட்டி மண்டலம் செங்கல்பட்டி முதல் தெருவில் நடைபெற்ற கழிவு நீர் வடிகால் தூர்வாரி மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்தார்.
மேலும் கழிவுகளை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு உடனடியாக அகற்றவும், தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் ஆணையாளர் ரவிச்சந்திரன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் ரவிச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் கோபிநாத், ஆனந்தகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.