நெல்லையில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


நெல்லையில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 Feb 2021 4:26 AM IST (Updated: 24 Feb 2021 4:26 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:
நெல்லை ரெட்டியார்பட்டி அருகே உள்ள தாமரைச்செல்வி பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (43). மின்வாரிய ஒப்பந்த தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் நேற்று அந்த பகுதியில் உள்ள நாற்கர சாலையில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இசக்கியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story