தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 4:48 AM IST (Updated: 24 Feb 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் நடத்தினர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. பின்னர் காலையில் சிறிது நேரம் கலைந்து சென்று விட்டு மீண்டும் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்றும் இரவு வரை நீடித்தது. 
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தேவி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரை சிங் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story