குளத்தில் தவறி விழுந்து டீ மாஸ்டர் சாவு


குளத்தில் தவறி விழுந்து டீ மாஸ்டர் சாவு
x
தினத்தந்தி 24 Feb 2021 5:17 AM IST (Updated: 24 Feb 2021 5:17 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் தவறி விழுந்து டீ மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.

அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் மணக்காடு தெருவைச் சேர்ந்த ஜமால் மைதீன் (வயது 45). இவர் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தில் உறவினர் டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று போகநல்லூர் செல்லும் சாலை அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது குளத்தில் தவறி விழுந்த அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story