மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே மயங்கி விழுந்த பெண் சாவு + "||" + The woman who fell unconscious near Pavoorchatram died tragically.

பாவூர்சத்திரம் அருகே மயங்கி விழுந்த பெண் சாவு

பாவூர்சத்திரம் அருகே மயங்கி விழுந்த பெண் சாவு
பாவூர்சத்திரம் அருகே மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மனைவி அருள்சீனி (வயது 53). இருவரும் கூலித்தொழில் செய்து வந்தனர். கடந்த 20-ந் தேதி அருள்சீனி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்சீனி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. குடித்துவிட்டு பாட்டியிடம் தகராறு செய்த தந்தையை திருத்த தீக்குளிப்பதாக தற்கொலை மிரட்டல் விடுத்த இளம் பெண் உடல் கருகி சாவு; பெருந்துறை அருகே பரிதாபம்
பெருந்துறை அருகே குடித்துவிட்டு வந்து பாட்டியிடம் தகராறு செய்த தந்தையை திருத்த தீக்குளிப்பதாக தற்கொலை மிரட்டல் விடுத்த இளம் பெண் உடல் கருகி இறந்தார்.
2. பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கணவர் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த பெண் சாவு
பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கணவரால் கத்தியால் குத்தப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-