வேலூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் ராணுவவீரர் உள்பட 2 பேர் பலி


வேலூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் ராணுவவீரர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 Feb 2021 4:41 PM IST (Updated: 24 Feb 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் ராணுவவீரர் உள்பட 2 பேர் பலியாகினர்.

வேலூர்

ராணுவ வீரர்

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ரத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 30). ராணுவ வீரர். இவர், தனது மகனின் காதுகுத்து விழாவுக்காக  விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 22-ந் தேதி பென்னாத்தூரில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு படவேடு நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். 

கேசவபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த படுகாயமடைந்த உலகநாதன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநகராட்சி பணியாளர்

வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). சதுப்பேரி குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரிக்கும் பணியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஓட்டேரியில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் வரும்போது எதிர்திசையில் வந்த தனியார் பஸ் அஜித்குமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜித்குமார் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story