கயத்தாறு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


கயத்தாறு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2021 4:59 PM IST (Updated: 24 Feb 2021 4:59 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே சவலாப்பேரி பஞ்சாயத்தை சேர்ந்த நாகம்பட்டி அன்னராஜ் மகன் கனகராஜ்(வயது 29). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். இவரும், தெற்கு கோனார் கோட்டை புதூரைச் சேர்ந்த ் சுடலை (வயது 50) என்பவரும் செட்டிகுறிச்சி யில் இருந்து வெள்ளாளங்கோட்டை செல்லும் வழியில் உள்ள பாறை பெருமாள் கோவில்அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்ற கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்அரிக்கண்ணன் ஆகியோர் அந்த 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 2 பேரையும் கைது செய்தனர். 

Next Story