வேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 மாற்றுத்திறனாளிகள் கைது.


வேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 மாற்றுத்திறனாளிகள் கைது.
x
தினத்தந்தி 24 Feb 2021 4:59 PM IST (Updated: 24 Feb 2021 4:59 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியேறும் போராட்டம்

வேலூர் அண்ணாசாலை ஏலகிரி அரங்க வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. 
ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில்  2-வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

சாலை மறியல்

இந்தநிலையில் மதியம் 12 மணி அளவில் மாற்றத்திறனாளிகள் அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலைக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story